2020ஆம் ஆண்டின் சிங்கே நடனம் வழக்கமானதைவிட நவீன பாணி யில் இருக்கும் என்று ஏற்பாட்டா ளர்கள் உறுதி கூறியுள்ளனர்.
சிங்க நடனம், வண்ண வண்ண மிதவைகள் ஆகியவை மட்டுமே இவ்வாண்டின் சிங்கே நடனமாக இருக்காது.
தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் பறக்கும் வானூர்திகள், உலோகக் கழி நடனங்கள், கழிகள் மீது ஆண் கலைஞர்களின் நடனம் என இளையர்களை ஈர்க்கும் வகையில் 2020ஆம் ஆண்டின் சிங்கே நடனம் அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஜாலான் புசாரில் உள்ள மக்கள் கழக அலுவலகத்தில் நேற்று சிங்கே நடனம் பற்றிய விவரங்கள் வெளி யிடப்பட்டன.
அப்போது, அடுத்த ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் எஃப்-1 கார் பந்தயம் தொடங்கும் இடத்தில் சிங்கே நடனம் நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டது.
மேலும் இவ்வாண்டு சிங்கேயில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சிறப்பு அம்சங்கள் பற்றியும் விளக்கப்பட்டது.
கழி நடனக் கலைஞர்கள் சாகசக்காட்சிகளில் ஈடுபட்டு கொடியைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
‘பிஎக்ஸ்டி போல் ஸ்டூடியோ’ நடனக் குழுவின் தலைவர் லூயிஸ் சியு, வயது 26, “கழி நடனம் பார்வையாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இருக்கும்,” என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் சிங்கே நடனம் ஏறக்குறைய 70,000 முதல் 90,000 பேரை ஈர்த்து வருகிறது.
இவ்வாண்டு புதிய முறையில் வித்தியாசமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால் இளை யர்கள் உட்பட மேலும் அதிகமான பார்வையாளர் களை சிங்கே நடனம் ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.