வேலையிட மரணங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் எட்டு பேர் வேலையிட விபத்துகளில் உயிரி ழந்துள்ளனர்.
இந்தத் தகவலை மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம் மது நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இம்மாதம் மரணமடைந்த எட்டு பேரில் எழுவர் வெளிநாட்டு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையிட மரணங்களின் திடீர் அதிகரிப்பு அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியதுடன் எச்சரிக்கை விடுப்பதாகவும் உள்ளது.
இவ்வாண்டு முற்பாதியில் மட் டும் 17 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலைமை தமக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.
“வேலை செய்துகொண்டிருக் கும்போது எட்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை கட்டு மானம், கடல்துறை போன்ற அதிக ஆபத்து உள்ள தொழில்துறைகளில் நிகழ்ந்துள்ளன.
“வேலையிட மரணங்களை உட னடியாகக் குறைக்கும் பொருட்டு, மனிதவள அமைச்சு அடுத்த இரண்டு மாதங்களில் அதிக ஆபத்து உள்ள துறைகளில், இயல்பான சோதனைகளைத் தவிர, கூடுதலாக 400 சோதனைகளை மேற்கொள்ளும்,” என்றும் திரு ஸாக்கி விவரித்தார்.
இந்த விழாக்காலத்தில் உற்பத்தி அட்டவணை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலையிட நடவடிக்கைகளும் அதிகரிக்
கக்கூடும் என்பதால் தொழில்துறை பங்குதாரர்கள் அதிக விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“நமது ஊழியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று அடிக்கடி சரி
பார்க்க வேண்டும் என்ற சிங்கப்பூர் குத்தகையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை கட்டுமான நிறுவனங்கள் ஏற்று நடக்க வேண்டும்,” என்றும் திரு ஸாக்கி வலியுறுத்தினார்.
அதிகரித்து வரும் வேலையிட மரணங்கள் பற்றி கருத்துரைத்த மனிதவளத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் திரு ஸைனல் சப்பாரி, “வேலையிட மரணங்களின் அதிகரிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2028ஆம் ஆண்டில் ஒவ்வொரு 100,000 ஊழியர்களுக்கு 1.0 புள்ளிக்குக் குறைவான விகிதத்தை எட்டும் நமது இலக்குக்கு இது பாதகமாக அமைகிறது.
“வேலையிடங்களில் நிகழும் விபத்துகள், அது கடுமையான காயங்களாக இருந்தாலும் மரணத்தை விளைவிப்பதாக இருந்தாலும் அது குறித்து விரிவான புலனாய்வு நடத்தி அதன் அடிப் படை காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வேலையிட மரணங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கமுடியும்,” என்றார்.