போதைப்பொருளைத் தவறான முறையில் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தில் நாளையிலிருந்து மேலும் 24 வகை போதைப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த 24 வகை போதைப்பொருட்களும் கஞ்சா, கொக்கேன், ஹெராயின், எக்ஸ்டசி போன்ற போதைப்பொருட்கள் உண்டாக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
உலக நாடுகளில் இத்தகைய போதைப்பொருட்களின் அளவு மிக விரைவில் அதிகரிப்பதாகவும் எளிதில் கிடைப்பதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
இத்தகைய போதைப்பொருட்களை உட்கொள்பவர்களுக்கு உடல்ரீதியான, உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் மரணத்தையும் அவை ஏற்படுத்துகின்றன.