ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், தமக்கு எதிராகப் பதிவாகியிருக்கும் மூன்று
குற்றச்சாட்டுகளில் ஒன்றை எதிர்த்து விசாரணை கோரியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் டவர்சில் 31 வயது திரு சதீஷ் நோவல் கோபிதாசைக் கொலை செய்ததாக ஏழு பேர் மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களில் 23 வயது நெட்டேலி சியாவ் யு சென்னும் ஒருவர்.
சியாவ் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டு கடந்த மாதம் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய ஒருவருடன் இருந்தது, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது பதிவாகின.