சாலையில் வெறித்தனம்: டாக்சி ஓட்டுநர் வேலையிழந்தார்

சாலையில் வெறித்தனம்: டாக்சி ஓட்டுநர் வேலையிழந்தார்

1 mins read
87b681d8-7ebe-45c6-be92-1daac890ca5d
இரு வேறு காணொளிகளில், ஒன்றில் காரை குத்தி, உதைத்து, வாகனமோட்டிக்கு தகாத சைகைகாட்டியதுடன் மற்றொரு சம்பவத்தில் தம்பதியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டாக்சி ஓட்டுநர். படங்கள்: ஃபேஸ்புக், யூடியூப் -
multi-img1 of 2

டாக்சி ஓட்டுநர் ஒருவர் அருகே நின்ற வாகனத்தை காலால் உதைத்து, கைகளால் குத்தும், தம்பதியை கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டும் காணொளிகள் சமூக வலைத் தளங்களில் பரவலானதை அடுத்து, அந்த ஓட்டுநரை டிரான்ஸ்-கேப் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த இரு காணொளிகளும் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டுகின்றன. முதல் சம்பவம் நவம்பர் 22ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில் டாக்சி ஓட்டுநர் தனது டாக்சியில் இருந்து இறங்கி, அந்தக் காணொளியைப் படமாக்கிய கார் ஓட்டிக்கு தகாத சைகைகளைக் காட்டுகிறார்.