பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி சில்வியா லிம், திரு லோ தியா கியாங் இருவரும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் தொடர்பான நிதி விவகாரங்களிலும் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டியதில்லை என்று அந்த நகர மன்றம் நேற்று தெரிவித்தது. அண்மையில் நடந்த கூட்டத்தில் காலாண்டுக் கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பில் 17 ஆதரவு வாக்குகள், ஓர் எதிர்ப்பு வாக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கிடையே, சிங்கப்பூரின் வீடமைப்புக் கொள்கை குறித்த கலந்துரையாடலை ஊக்குவிக்கும் செயல்வடிவத் திட்டத்தை பாட்டாளிக் கட்சி வெளியிட்டுள்ளது. வீவக வீடுகளின் குத்தகையை திரும்ப ஒப்படைக்கும் திட்டம், தற்போதைய தேர்வுசெய்யப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டம் ஆகியவை விரிவாக்கப்படுவது போன்ற பரிந்துரைகளை அதில் முன்வைத்துள்ளது.