சென்னை: சென்னை கே.கே. நகரில் 125 ரூபாய் கடனைத் திருப்பித் தராத கட்டுமானத் தொழிலாளி ராபர்ட்டை மது போத்தலால் குத்திக்கொன்ற அவரது நண்பர் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராபர்ட், 40. ராபர்ட், நண்பர் சிவகு மாரை தகாத வார்த்தை களால் பேசியதால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராபர்ட் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிரிழந்தார்.
சென்னை கே.கே.நகர் சண்முகம் சாலையில் பிளாட்பாரத்தில் தங்கியபடி கட்டுமான வேலை செய்து வந்தார். இவரது நண்பரான விழுப்புரத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரும் பிளாட்பாரத்தில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தார். ராபர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமாரிடம் 250 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதில் 125 ரூபாய் திருப்பி கொடுத்துவிட்டார். மீதி பணத்தை கொடுக்கவில்லை.
மீதி பணம் 125 ரூபாய்க்காக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் இந்த பண விவகாரம் தொடர்பாக குடிபோதையில் மோதிக்கொண்டனர். ராபர்ட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த சிவகுமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மற்றொருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.