தேனி: தேனி அருகே ஃபேஸ்புக் காதலரைக் கொல்ல காதலியின் உறவினர்கள் அனுப்பிய 10 பேர் கொண்ட கூலிப்படை கும்பலைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர் அசோக்குமாருக்கும் மலேசியாவைச் சேர்ந்த அருணாவுக்கும் ஃபேஸ்புக் வழி காதல் மலர்ந்தது.
இதையடுத்து அருணாவை நேரில் பார்த்த அசோக் குமார், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அருணா மலேசியாவில் உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அருணாவின் உறவினர்கள் அசோக்குமாரை கொல்ல கூலிப்படையை ஏவியுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த கும்பலின் கொலை சதியை போடி காவல்துறையினர் முறியடித்தனர்.