முன்யோசனையின்றி நடந்துகொண்டதன் பேரில் போலிசார் இரு ஆடவர்களைக் கைது செய்திருக்கின்றனர். கடந்த மாதம் 28ஆம் தேதி, எங்கோர் ஸ்திரீட்டில் ஒரு தனிநபர் நடமாட்டச் சாதனத்தை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநருக்கும் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநருக்கும் இடையே மூண்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்ததாக போலிசார் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 43 வயது கார் ஓட்டுநரும் 36 வயது தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநரும் கடந்த இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
முன்யோசனையின்றி நடந்துகொண்ட குற்றத்திற்காக அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 2,500 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.