அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வரைவதன் தொடர்பில் சிங்கப்பூரர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் நிதி அமைச்சு வரவேற்கிறது. வரவுசெலவுத் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும்.
தனிநபர்கள், குடும்பங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தீவு முழுவதும் 20க்கும் அதிகமான இடங்களில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
கருத்து சேகரிப்புப் பிரிவான ‘ரீச் வரவுசெலவுத் திட்டம் 2020’ இணையப்பக்கம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளை முன்வைக்கலாம். மேல் விவரங்களுக்கு www.reach.gov.sg/budget2020 எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.