மேம்பாலம் இடிந்து விழ காரணமான பொறியாளர் கைது

2017ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இடிந்து விழுந்த தீவு விரைவுச்சாலை (பிஐஇ) மேம்பாலத்தைக் கட்டுவதற்கான திட்டப்பணிகளைத் தயாரித்த பொறியாளருக்கு 86 வாரங்கள் சிறை தண்டனையும் $10,000 அபராதமும் இன்று (டிசம்பர் 2) விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், இந்தோனீசியாவைச் சேர்ந்த 46 வயது திரு ரொபர்ட் அரியாந்தோ யான்ந்தரா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

ஆபத்து விளைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்ததைத் தமது தீர்ப்பை வழங்கும்போது சுட்டினார் துணைத் தலைமை நீதிபதி ஜனிஃபர் மெரி. 

‘சிபிஜி கொண்சல்ட்டனஸ்’ நிறுவனத்தால் பணி அமர்த்தப்பட்டிருந்த திரு ரொபர்ட், தமது பணிக் குழுவின் பொறியாளர்கள் மேம்பாலங்கள் உருவாக்குவதில் தேவையான அனுபவம் பெறாதவர்கள் என்று அறிந்தும், அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதலும் உத்தரவுகளும் வழங்க தவறினார். 

மேம்பாலத்தின் சில அம்சங்களின் வடிவமைப்புகளையும் சோதிக்க தவறினார் திரு ரொபர்ட். 

அதோடு தமது பொறியார்கள் செய்தத் தவறான கணக்குகளை அறிந்தும், தக்க நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்துவிட்டார் அவர். 

இந்த அலட்சியத்தால் 31 வயது சீன ஊழியரான திரு சன் யின்சுவான் இறந்தது உட்பட மேலும் 10 ஊழியர்கள் காயமடைந்தனர். 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ரயில் நிலையங்களில் உள்ள வரைபடத்துக்குப் பதிலாக இந்தப் புதிய படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மாற்றப்படும் என்றது ஆணையம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

11 Dec 2019

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ஜனவரியில் திறப்பு; முதல் 3 நாட்களுக்கு இலவச பயணம்

காலை 10 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பகல் 12 மணியளவில் முற்றாக அணைக்கப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. படங்கள்: எஸ்சிடிஎஃப் /ஃபேஸ்புக்

11 Dec 2019

துவாஸில் ஆறு மணி நேரம் பற்றி எரிந்த தீ

தான் வேண்டுமென்றேதான் மைனாவைத் தொங்கவிட்டதாகவும் இப்படிச் செய்தால் தன் சமையலறைக்குள்  வரக்கூடாது என்று மற்ற மைனாக்களுக்கும் தெரிய வரும் என்றும் கருதுவதாக அந்த மாது தன் செயலுக்கு விளக்கம் அளித்திருந்தார். படம், காணொளி: ஏக்கர்ஸ் ஃபேஸ்புக்

11 Dec 2019

மைனாவுக்குப் பாடம் புகட்ட எண்ணி அதை சன்னலுக்கு வெளியே தொங்கவிட்ட குடியிருப்பாளர்