அரசாங்க ஊழியர்களின் ஆண்டிறுதி ஊக்க தொகை சரிவு

 

இவ்வாண்டு அரசாங்க ஊழியர்களின் ஆண்டு இறுதி ஊக்க தொகை குறைக்கப்படும்.

நிச்சயமற்ற பொருளியல் சூழல் காரணத்தால் போனஸ் வழங்குவதில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது.

‘சூப்பர்ஸ்கேல்’ நிலைகளுக்குக் கீழ் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டிறுதி ஊக்க தொகையாக 0.1 மாத போனஸும்  (ஏவிசி) $250யிலிருந்து $1,500 வரையிலான ஒருமுறை தொகையும் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.

குறைவான ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.

அதே சமயம் ‘சூப்பர்ஸ்கேல்’ நிலைகளில் உள்ள மூத்த அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டிறுதி போனஸுக்கு பதிலாக $400 தொகை வழங்கப்படவிருக்கிறது.

கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட போனஸ் தொகையைவிட இது மிகக் குறைவு. கடந்த ஆண்டின் பொதுச் சேவை அதிகாரிகளுக்கு ஒரு  மாத போனஸ் (ஏவிசி) வழங்கப்பட்டது.