ஈராண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்த தீவு விரைவுச்சாலை மேம்பாலத்தின் பணித்திட்டத்தைத் தயாரித்த பொறியாளருக்கு நேற்று 86 வாரச் சிறையும் $10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி எஸ். ஜெனிஃபர் மரி, கவனக்குறை வால் இந்த சம்பவம் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தின் துணை குத்த கையாளரான சிபிஜி கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் தகுதிபெற்ற அதிகா ரியான 46 வயது இந்தோனீசியர் ராபர்ட் அரியாந்தோ ஜன்ட்ராவுக்கு, தனது பொறியாளர் குழு பாலங் களை வடிவமைப்பதில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்களை வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மேம்பாலத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களுக்கான வடி வமைப்புகளை ராபர்ட் சரிபார்க்கத் தவறினார். அந்தத் தூண்கள் வலு விழந்ததால்தான் பாலம் இடிந்தது.
இந்த விபத்தில் சீனாவின் ஊழியரான 31 வயது சென் யின்சுவான் மரணமடைந்ததுடன் 10 பேரும் காயமடைந்தனர்.
மேம்பாலத்தின் மேற்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 11 ஊழியர்கள் ஒன்பது மீட்டர் உய ரத்திலிருந்து தரையில் விழுந்தனர்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான ராபர்ட் மீது, கட்டட, கட்டுப்பாட்டுச் சட்டம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.
கடந்த மாதம் 20ஆம் தேதி ராபர்ட் தம் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் மூன்றை ஒப்புக் கொண்டார். எஞ்சிய இரு குற்றச் சாட்டுகள் தண்டனை விதிப்பின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
தீவு விரைவுச்சாலை மேம்பாலத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் தூண்களை வடிவமைக்கும் குழு வில் அனுபவமில்லாத அல்லது குறைந்த அனுபவம் உடைய ஐந்து பொறியாளர்கள் இருந்தனர். பொறி யாளர் குழுவுக்கு ராபர்ட் தலைமை தாங்கினார்.
குழுவின் ஐந்து பொறியாளர் களுக்கும் தூண்களை வடிவமைக் கும் கணக்குகளைப் போடத் தெரி யாது என்றும் அரசுத் தரப்பு தெரி வித்தது.
அங்கீகாரமற்ற பணிகளை மேற்கொண்ட இந்தக் கட்டுமானத் திட்டத்தின் பிரதான குத்தகை யாளரான ஒர் கிம் பியாவ் நிறுவ னத்துக்கு $10,000 அபராதம் முன்ன தாக விதிக்கப்பட்டது.