‘உயர்தர பொறியியல் திறனாளர்கள் தேவை’

புதிய உள்துறைக் குழுவின் அறி வியல், தொழில்நுட்ப அமைப்பின் அனைத்துப் பிரிவுகளுக்கும் உயர் தர பொறியியல் திறனாளர்கள் தேவை. ஆனால் அந்தத் தரத்திலான திறனாளர்களை ஈர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சின் கீழ் இயங்கவிருக்கும் புதிய அரசாங்க ஆணை பெற்ற கழகமான உள் துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த திரு லீ இவ்வாறு கூறினார்.

“அரசாங்கம் அண்மைய ஆண்டுகளில் தகுதியானவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்கியுள்ளது. உதாரணத்துக்கு, வெளிநாடு களில் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் சிங்கப்பூரர்களை நாடு திரும்ப அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

“போட்டித்தன்மைமிக்க சம்ப ளம், வாழ்க்கைத்தொழில் வளர்ச்சி, நல்ல வேலையிடச் சூழல் ஆகிய வற்றை அவர்களுக்கு வழங்கு வதுடன் மற்றொரு முக்கியமான அம்சமும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. அது, சாதிக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களுக்குள் கொண்டு வருவது,” என்று பிரதமர், மீடியாபொலிஸ் வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில் விவரித்தார்.

“பொதுச் சேவையில் மதிப்பு மிக்க வகையில் பங்காற்றுவதற்கு பொறியாளர்களுக்கு பொறுப்பு களை வழங்கும் பொறியியல் வேலைகளை நாம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். அதை உள் துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஏற்றுக் கொள்ளலாம்.

“உயிர்களையும் சொத்துகளை யும் பாதுகாத்தல், சட்ட ஒழுங்கைக் கட்டிக்காத்தல், முக்கியமாக அறிவியல், தொழில்நுட்பம் மூலம் சிங்கப்பூரைத் தற்காத்தல் ஆகி யவை மிக உன்னதமான பொறுப்பு கள். இதை மனதிற்கொண்டு, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், கணிதத் திறனாளர்கள் உள் துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பில் சேர்வார்கள் என்று நம்புகிறேன்,” என் றும் வலியுறுத்தினார் பிரதமர் லீ.

சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாது காப்பை அறிவியல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆற்றல்களை வலுப்படுத்தும் பொறுப்பு, 1,300 ஊழியர்களைக் கொண்ட உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணியை மேற்கொள்ள அந்த அமைப்புக்கு கிட்டத்தட்ட 2,000 அதிகாரிகள் தேவைப்படுவார்கள்.

“இந்த அமைப்பு வெற்றிபெற, உள்துறைக் குழுவின் இதர அமைப் புகள் தொழில்நுட்பத்தை தங்கள் செயல்பாடுகளில் முக்கிய அம்ச மாகப் பயன்படுத்த வேண்டும்.

“தொழில்நுட்பத்தை கூடுதல் அம்சமாகக் கருதாமல் அதையே மையமாகக் கொண்டு பயன்படுத்த வேண்டும். இந்தப் பணியை ஆற் றும் பொறுப்பை உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பிடம் விட்டு விடாமல், ஒவ்வோர் உள்துறைக் குழுவும் கூட்டு பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

“உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு தங்கள் அமைப்பு ஆற்ற வேண்டிய பணியை ஒவ்வோர் அணித் தலைவரும் ஒவ்வோர் அதிகாரியும் வரவேற்க வேண்டும், மதிக்க வேண்டும்,” என்றும் திரு லீ கேட்டுக் கொண்டார்.

உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, உள் துறைக் குழுவை அடுத்த உச்சத் துக்குக் கொண்டு செல்லும் என் றும் பிரதமர் லீ நம்பிக்கை தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!