சிங்கப்பூரில் பெருகிவரும் சீன வர்த்தக நிறுவனங்கள்

தீவு முழுவதும் சீன நிறுவனங்கள் பெருகி வரும் நிலையை நம்மால் உணராமல் இருக்க முடியாது. அத்துடன் நாட்டின் பொருளியலில் சீனாவின் முதலீடும் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் சீனாவின் முதலீட்டுக்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. இந்த முதலீடு கிட்டத்தட்ட 2005ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கிவிட்டது.

சென்ற ஆண்டின் இறுதிவரை சிங்கப்பூரில் சீனா கிட்டத்தட்ட $41.8 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சென்ற மாதம் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சீனாவின் பொருளியல் பங்கு, கலாசார தாக்கம் ஆகியவை மட்டுமின்றி அந்நாட்டின் வேலை தொடர்பான பழக்கங்களும் இந்த முதலீடுகளில் தெரிகின்றன.

இத்தொகை 2005ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததைவிட 45 மடங்கு அதிகமாகும்.

மற்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட முதலீடு இதே காலகட்டத்தில் வெறும் 4.4 மடங்கே வளர்ச்சி கண்டிருக்க, சீனாவின் முதலீடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

இதற்கிடையே சென்ற ஆண்டின் இறுதியில் அமெரிக்கா $292.5 பில்லியனும் நெதர்லாந்து $127.8 பில்லியனும் ஜப்பான் $117.9 பில்லியனும் சிங்கப்பூரில் முதலீடு செய்திருந்தன. இவற்றை ஒப்பிடுகையில் சீனா பின்னிலையில் இருந்தாலும் சிங்கப்பூரில் முதலீடு செய்யும் அதன் நிலை, கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

பட்டியலின்படி மலேசியா $39.3 பில்லியனையும் ஜெர்மனி $22.8 பில்லியனையும் சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளன.

சிங்கப்பூரின் 27வது பெரும் முதலீட்டு நாடாக 2005ஆம் ஆண்டில் இருந்த சீனா, 16 இடங்கள் முன்னேறி சென்ற ஆண்டு 11வது இடத்திற்கு வந்தது.

தற்போதைய நிலையில் சிங்கப்பூரின் பேரங்காடிகளில் அதிகமாகவே சீன வங்கிகளைக் காண முடிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!