சாலையில் வந்து சென்ற வாகனங்களைச் சுத்தியலால் அடித்துக் கொண்டிருந்த ஆடவரைக் கைது செய்ய உதவிய கைரில் அன்வார் தாஹிருக்கு நேற்று பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருது வழங்கப்பட்டது.
உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியரான திரு கைரில் (39), சென்ற புதன்கிழமையன்று தம் பெற்றோர் வீட்டிலிருந்து உட்லண்ட்சுக்கு சென்றுகொண்டிருந்தபோது டோக் நார்த் சாலையில் வயதான ஆடவர் ஒருவர் வாகனங்களைத் தாக்குவதைக் கண்டார்.
ஆடவரால் பிறருக்குக் காயங்கள் ஏற்படலாம் என்ற அக்கறையில் ஆடவரை நோக்கிக் கூச்சலிட்டு திசைதிருப்பப் பார்த்தார்.
ஆடவர் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதால் பின்னர், திரு கைரில் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், ஆடவரைக் கட்டுப்படுத்த முயன்றபோதும் திரு கைரில் உதவினார்.
சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.
அவரின் பொதுநலச் செயலுக்காக பிடோக் போலிஸ் பிரிவு அவரைப் பாராட்டி விருது அளித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity