‘ஊடகத் துறைக்கு தொழில்நுட்பத் திறனாளர்கள் தேவை’

சிங்கப்பூர் ஊடகத் துறை மேலும் மேம்பட புத்தாக்கம் மட்டுமல்லாமல் தொழில்நுட்பத் திறனாளர்களும் தேவைப்படுகின்றனர் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை விநியோகித்து உலக முழுவதும் உள்ள வாசகர்களை ஈர்க்க தொழில்நுட்ப ஆற்றல் அவசியம்,” என்றார் அவர்.

 இத்தகைய திறனாளர்களை உருவாக்க அரசாங்கமும் தொழிற்துறையினரும் சேர்ந்து செயல்படலாம் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முதன்முறையாக நடைபெறும் அனைத்துலக ஊடக ஆலோசனை மன்றத்தில் நேற்று முன்தினம் திரு ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

இந்த வட்டாரத்தின் தலைசிறந்த ஊடகத்துறை தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் ஊடகத் துறையின் போக்குகள் குறித்த கலந்துரையாடலை வழிநடத்தினர்.

தற்போது நடைபெற்றுவரும் சிங்கப்பூர் ஊடக விழாவில் இது அங்கம் வகிக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த புதனன்று வெளியிடப்பட்ட புதிய ‘எம்ஆர்டி கட்டமைப்பு’ வரைபடம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

14 Dec 2019

புதிய எம்ஆர்டி வரைபடத்திற்கு நல்ல வரவேற்பு

மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்துக்கு வருகை அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டார் அமைச்சர் ஸாக்கி

தமிழில் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் உரையாடுகிறார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான
திரு விக்ரம் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

குதூகலத்துடன் தமிழைக் கற்க ஒரு சுற்றுலா