ஆஸ்திரேலியாவில் எஸ்ஐஏ நிறுவனத்திடம் விசாரணை

சிட்னி விமான நிலையத்தில் போயிங் 747 சரக்கு விமானத்தை இறக்கும்போது அதன் இயந்திரம் தரையில் மோதிய விவகாரம் தொடர்பில் எஸ்ஐஏ விமான நிறுவனத்திடம் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு இலாகா விசாரணை நடத்தி வருகிறது.

பொதுவாக விமானத்தின் இயந்திரம் இறக்கையின் அடியில் அல்லது வாலில் பொருத்தப்பட்டிருக் கும்.

கடந்த நவம்பர் 28ஆம் தேதி சிட்னி விமான நிலையத்தில் எஸ்ஐஏயின் ‘போயிங் 747’ சரக்கு விமானம் மோசமான சம்பவத்தில் சிக்கியது என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு இலாகாவின் இணையப் பக்கத்தில் இடம்பெற்ற அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டது. அப்போது ஓடுபாதையை அணுகியபோது விமானத்தின் 1வது இயந்திரம் தரையில் மோதியதாக  இலாகா கூறியது.

விமானத்தை பாதுகாப்பாக இறக்க முடியாத சூழ்நிலையில்  ஒரு குறிப்பிட்ட நடை முறையை விமானிகள் கடைப்பிடிப்பது வழக்கம். 

இந்த நடைமுறையைப் பின்பற்றி  எஸ்ஐஏ விமானத்தை இறக்க  விமானிகள் முற்பட்டபோது இயந் திரம் தரையில் மோதியது என்று இலாகா தெரிவித்தது. 

சம்பவத்தன்று விமானத்தில் பயணம் செய்த சிப்பந்திகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அது  விசாரணை மேற்கொண்டு வரு கிறது. விமானி அறை தகவல் பதிவு ெபட்டியில் பதிவான தக வல்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணையின் முடிவு 2020ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.