$43,000 மதிப்புள்ள போதைப் பொருள்; சிங்கப்பூர் ஆடவர் கைது

சுமார் 43,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 38 வயது சிங்கப்பூர் ஆடவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 385 கிராம் ஐஸ் உட்பட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து வெளியிட்ட தகவலில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5க்கு அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக  மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

டெக் வை அெவன்யூ கார்ப்பேட்டையில் மற்றொருவரை சந்தித்தபோது அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் மலேசியரான அந்த மற்றொரு நபர், பின்னர் உட்லண்ட்ஸ் சர்க்கிள் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூர் ஆடவரிடமிருந்து 385 கிராம் ஐஸ், 32 கிராம் அபின், 100 எக்ஸ்டசி மாத்திரைகள், 50 எரிமின்-5 மாத்திரைகள், சிறிய அளவிலான கஞ்சா ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஆடவரிடமிருந்து கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய ஆடவர் 5,300 வெள்ளி ரொக்கத்துடன் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.