துப்புரவுப் பணியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி

சிங்கப்பூரில் உள்ள அனைத்து துப்புரவுப் பணியாளர்களும்  வரும் 2022ஆம் ஆண்டு முதல் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இதன்மூலம் அதிகமான முதிய ஊழியர்களிடம் அணியில் வழுக்கி விழுதல், தடுக்கி விழுதல் போன்ற விபத்துகளைக் குறைக்க முடியும்.

மேலும் அவர்களின் முதலாளி கள் அவர்களை ஊழியரணி ஆற் றல் தகுதிச் சான்றிதழ் பயிற்சியில் உள்ள மூலப் பயிற்சிகளில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்ப வேண்டும் என்று துப்புரவுகள் குழுமம் தொடர் பான முத்தரப்புக் குழு பரிந்துரைத் துள்ளது.

கழிவறைகளைப் பராமரிக்கும்  துப்புரவுப் பணியாளர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து அதிக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் முத்தரப்புக் குழுவின் பரிந்துரை.

கட்டடத்துக்குள் துப்புரவுப் பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கான சம்பளம் $1,274லிருந்து $1,486க்கு உயர்த்தப்பட வேண்டும். அவர் களின் கடின உழைப்புக்கு இது ஓர் அங்கீகாரமாக இருக்கும் என் றும் முத்தரப்புக் குழு நேற்று கூறி யது.

தொழிலாளர் இயக்கம், முதலா ளிகள், துப்புரவு நிறுவனங்கள், அரசாங்கம் ஆகியவற்றின் பிரதி நிதிகள் இந்த முத்தரப்புக் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

இந்தப் பரிந்துரைகளை அரசாங் கம் நேற்று ஏற்றுக்கொண்டது. 

2014ஆம் ஆண்டிலிருந்து உரி மம் பெற்றுள்ள துப்புரவு நிறுவனங் கள் படிப்படியான சம்பள உயர்வு முறையைக் கடைப்பிடித்தாக வேண் டும்.

2016 மற்றும் 2018ஆம் ஆண்டு களில் இந்த முறை மேம்பாடு கண்டபோது, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு வரை துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 விழுக்காடு வருடாந்திர சம்பள உயர்வும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வருடாந்திர போனஸும் கிடைக் கும்.

“சம்பள முறையில் கூடுதல் மேம்பாட்டை அறிமுகப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். அடிப்படை சம்பள அளவை நாம் உயர்த்துவதால், ஊழியர்களின் திறன்களை நாம் மேம்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் முதலாளிகள் அவர்களின் சம்பளத்தை உயர்த்து வதற்கு நியாயம் கற்பிக்க முடியும்,” என்றார் துப்புரவுகள் குழுமம் தொடர்பான முத்தரப்புக் குழுவின் தலைவர் ஸைனல் சப்பாரி.

மொத்த துப்புரவு ஊழியரணி யில் 68 விழுக்காட்டினர் அதாவது 39,000 பேர் சிங்கப்பூர்வாசிகளாக உள்ளனர். 

“ரசாயனம் ஆபத்தானது என் பது சிலருக்குத் தெரியாமல் இருக் கலாம். தொழில்துறையில் இயந் திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பது விபத்துகளைத் தவிர்க்க உதவும்,” என்றார் குழுவின் உறுப்பினர் களில் ஒருவரான சிங்கப்பூர் சுற்றுச் சூழல் நிர்வாகச் சங்கத்தின் தலை வர் திரு டோனி சூய். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த புதனன்று வெளியிடப்பட்ட புதிய ‘எம்ஆர்டி கட்டமைப்பு’ வரைபடம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

14 Dec 2019

புதிய எம்ஆர்டி வரைபடத்திற்கு நல்ல வரவேற்பு

மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்துக்கு வருகை அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டார் அமைச்சர் ஸாக்கி

தமிழில் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் உரையாடுகிறார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான
திரு விக்ரம் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

குதூகலத்துடன் தமிழைக் கற்க ஒரு சுற்றுலா