தேசிய கீதத்தின் புதிய ஒலிப்பதிவு வெளியீடு

சிங்கப்பூர் தேசிய கீதத்தின் புதிய ஒலிப்பதிவு நேற்று காலை 11.20 மணிக்கு முன்னாள் நகர மன்றப் படிகளிலும் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலித்தது.

புதிய வடிவத்தில் பாடலில் இசைக் கருவிகளின் ஒலி அசைவு களைத் தெளிவாகக் கேட்க முடி யும் என்று தேசிய மரபுடைமைக் கழகம் நேற்று தெரிவித்தது.

1959ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி காலை 11.20 மணிக்கு தேசிய கீதம், தேசியக் கொடி, அரசு முத் திரை ஆகியவை பொதுமக்க ளுக்கு வெளியிடப்பட்டன.

அதன் பிறகு சிங்கப்பூரின் தலைவராக திரு யூசோஃப் இஷாக் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் 1965ஆம் ஆண்டில் சுதந்திர சிங்கப்பூரின் முதல் அதிபராகவும் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத் தில் கருத்துரைத்த அதிபர் ஹலிமா யாக்கோப், தேசிய கீதம், தேசியக் கொடி, அரசு முத்திரை ஆகியவை சிங்கப்பூரர்கள் கட்டிக்காக்க 

வேண்டிய பண்புநலன்களைப் 

பிரதிபலிக்கின்றன,” என்றார்.

தேசிய கீதத்தின் புதிய வடி வத்தை இன்னும் பல தேசிய தின அணிவகுப்புகளிலும் அனைத்துலக விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் கேட்க தாம் ஆவலாக இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார். 

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், “ஒற்றுமையான, பல கலா

சார சமூகத்தை வளர்க்கும் அதே வேளையில் உலக அரங்கில் சிங் கப்பூரை ஒரு வெற்றிகரமான தேச மாக முன்னிலைப்படுத்தி மக்கள் சாதித்திருக்கின்றனர்,” என்று தமது ஃபேஸ்புக்கில் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்துக்கு வருகை அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டார் அமைச்சர் ஸாக்கி

தமிழில் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் உரையாடுகிறார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான
திரு விக்ரம் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

குதூகலத்துடன் தமிழைக் கற்க ஒரு சுற்றுலா