உள்ளூர் உணவு உற்பத்தியை பெருக்க இயக்கம்

உள்ளூர் உணவு உற்பத்தியை பெருக்க இயக்கம்

1 mins read
29942809-bdf9-4c4b-900d-515820906382
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட மீன், முட்டை காய்கறிகள் அதிகமான உணவுகளிலும் கடைகளிலும் இடம்பெறக்கூடும்.

சிங்கப்பூர் அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஆசிய விஞ்ஞானி எழுத்து பரிசு விருது விழாவில் பேசிய, சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி 'சிங்கப்பூர் உணவுக் கதை' இயக்கத்தை நேற்று அறிவித்தார். அடுத்த ஆண்டு, சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உணவுவகைகளை விளைவிக்கவும் உள்ளூர் விளைபொருட்களை உண்ணவும் ஊக்குவிக்க 'சிங்கப்பூர் உணவுக் கதை இயக்கம்' தொடங்கும்," என்றார் அவர்.

உலகளாவிய உணவு விநியோக்கத்தில் ஏற்படும் திடீர் தட்டுப்பாடுகளை எதிர்கொள்ள ஏதுவாக குடியரசின் விவசாயத் துறை தயாராக வேண்டிய முக்கியத்துவத்தை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்