நடிகையும் மாடலுமான மெலிசா ஃபெய்த் இயோ லே ஹோங் சென்ற மே மாதம் போலிஸ் அவசர அழைப்பு எண்ணில் அழைத்து, அழைப்பை எடுத்தவரிடம் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அழைப்பை எடுத்த திரு மொஹமட் ஃபைசான் முகமது ரைஸ், 38, அமைதியாக இருக்கச் சொன்னபோது கோபமடைந்த அவர் தகாத வார்த்தையை உதிர்த்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றொரு சம்பவத்தில், சொத்து முகவராகவும் பணிபுரியும் 33 வயதான இயோ, எஸ்எம்ஆர்டி ஊழியரிடம் ஆபாசமான சைகையைக் காட்டியுள்ளார். இரண்டு குற்றங்களையும் ஒப்புக்கொண்ட இயோவுக்கு துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நேற்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.