சிங்கப்பூரின் ஐந்தாவது பெரிய குழு மருத்துவக் காப்புறுதி என நம்பப்படும் எஃப்.டபிள்யூ.டி குழுமம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுகிறது. ஹாங்காங்கின் முதலீட்டு நிறுவனமான பசிபிக் செஞ்சுரி குழுமத்தைச் சேர்ந்த அந்தக் காப்புறுதி நிறுவனம் சிங்கப்பூரில் தனது ஊழியர் நலன் காப்புறுதி சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாகக் கூறியது. இந்நடவடிக்கையால் பல்வேறு நிறுவனங்களில் அதன் காப்பு றுதிகளைப் பெற்றிருக்கும் 80,000க்கும் மேற்பட்ட உறுப்பினர் கள் பாதிக்கப்படைவர் என அதன் இணையத்தளம் கூறியது.
எஃப்.டபிள்யூ.டி காப்புறுதி குழுமம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுகிறது
1 mins read
-

