சாலையில், அருேக நின்ற வாகனத்ைத டாக்சி ஓட்டுநர் ஒருவர் காலால் உைதக்கும், கைககளால் குத்தும், அந்த வாகனத்தில் இருந்த தம்பதிையக் தகாத வார்த்ைதகளால் கண்டபடி திட்டும் காெணாளிகள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வெகுவாகப் பரவின.
அந்தச் சம்பவம் நிகழ்ந்த இரு நாட்களுக்குப் பிறகு நடந்த மற்றொரு சம்பவத்தில், ஃபார் ஈஸ்ட் பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே வேறொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் டேவிட் ஃபெங் ஸன்னிங் எனும் 42 வயதான அந்த டாக்சி ஓட்டுநர்.
அன்றைய தினம் காலை 11.30 மணியளவில், அங்கிருந்த டாக்சி நிறுத்துமிடத்தில் தனது ஐந்து மாதக் குழந்தையுடன் இருந்த அவரது பெண் பயணி ஒருவரை நோக்கி குறடு ஒன்றை ஃபெங் வீசியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் அந்தக் குழந்தை காயமடையவில்லை என போலிஸ் தெரிவித்தது.
அந்த டாக்சி நிறுத்துமிடத்தில் மற்றொரு பயணியை ஃபெங் தள்ளிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கீழே விழுந்த அந்தப் பயணியின் வலது உள்ளங்கையில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களை அடுத்து, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஃபெங்கை போலிசார் புதன்கிழமை கைது செய்தனர். அந்த ஓட்டுநர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இன்னொரு நபரை வேண்டுமென்றே மிரட்டியதாக குற்றச்சாட்டு ஒன்றை ஃபெங் எதிர்நோக்குகிறார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஃபெங் வேலை செய்த டாக்சி நிறுவனமான ‘டிரான்ஸ்-கேப்’, அவரது வேலை ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
ஆர்ச்சர்ட் அருகே பேட்டர்சன் ஹில் பகுதியில் ஓட்டுநர் ஒருவர் வாகன ஒலியை எழுப்பியதால் கோபமடைந்த ஃபெங், அந்த ஓட்டுநரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். கடந்த மாதம் 22ஆம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக போலிஸ் இன்று தெரிவித்தது.
இச்சம்பவத்தில் அந்த காரை ஃபெங் குத்தி, உதைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த காரில் இருந்த ஓட்டுநர் காயமடையவில்லை.
தனது செயல்களுக்குத் தாம் விளக்கமளிக்க விரும்பவில்லை என்று கூறிய ஃபெங், சமூக ஊடகங்களில் தம்மைப் பற்றி பரவுவது குறித்து தமக்குக் கவலையேதுமில்லை என்றும் கூறியுள்ளார்.
மனநலக் கழகத்தில் ஃபெங் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இம்மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஃபெங்கிற்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity