பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நன்கொடை திரட்டு

நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் பயன்படுத்தாத ஊழியர் அனுகூலங்களை அறிநிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்கும் முயற்சிக்கு சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட காப்புறுதித் தரகு நிறுவனமான ‘சிஎக்ஸ்ஏ’ குழும

மும் தேசிய தொண்டூழியர், நன்கொடையாளர் நிலையமும் கைகோத்துள்ளன.

அவ்விரு அமைப்புகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், நல்ல நோக்கமுடைய இந்த முயற்சி யால் ஊழியர்கள் மூலம் கிடைக்கப் பெறும் மில்லியன் கணக்கான வெள்ளி பெறுமானமுள்ள ஊழியர் அனுகூலங்கள் அதிக ஆதரவு தேவைப்படும் சிங்கப்பூர் பிரிவு களுக்கு உதவுவதில் பயன்படுத்தப் படும் என்று தெரிவித்தன.

‘சிஎக்ஸ்ஏ’ குழுமம் நிறுவனங் களின் காப்புறுதித் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் அவற் றின் ஊழியர்களின் சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ற மருத்துவ காப்புறுதியையும் வழங்குகிறது.

‘சிஎக்ஸ்ஏ’ குழுமத்தின் காப்புறு திச் சேவைகளைப் பெற்றிருக்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் ‘பிளக்ஸி டாலர்’ எனும் அனுகூலங் களைப் பெற்றிருப்பார்கள்.

அந்த அனுகூலங்களில் காப் புறுதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உடலுறுதிச் சேவைகள் போன்றவை உள்ளடங்கும்.

“ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும், குறிப்பாக டிசம்பர் மாதத்தின் இறுதியில் ‘சிஎக்ஸ்ஏ’ குழுமத்தின் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாத ‘பிளக்ஸி டாலர்’கள் காலாவதியாகும். அவை திரும்ப நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு விடும்.

“இந்த ‘பிளக்ஸி டாலர்’கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கத் தில் நிறுவனங்களின் மனிதவளப் பிரிவுகளுடன் ‘சிஎக்ஸ்ஏ’ குழுமம் இணைந்து இந்த ‘பிளக்ஸி டாலர்’ களின் மூலம் கிடைக்கும் பணத்தை அறநிறுவனங்களுக்கு நன்கொடை யாக அளிக்கலாம்,” என்று ‘சிஎக்ஸ்ஏ’ குழுமத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி ரோசலின் சாவ் கூ தெரிவித்தார்.

400,000க்கு மேற்பட்ட ஊழியர் கள் தற்போது ‘சிஎக்ஸ்ஏ’ குழுமத்தின் இணையவாசலைப் பயன் படுத்துகிறார்கள் என்றும் திருவாட்டி ரோசலின் கூறினார்.

இந்த முயற்சி மூலம் தொடக்க மாக $1 மில்லியன் தொகையைத் திரட்டி, அதை சமூக உண்டியல் அமைப்பின் Giving.sg தளம் மூலம் நன்கொடையாக வழங்க அமைப்பு கள் இலக்கு கொண்டுள்ளன.

“இந்தப் பங்காளித்துவத்தின் மூலம் இன்னும் அதிகமான மக்கள் அறநிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் போக்கை அதிகரிக்க லாம்,” என்று தேசிய தொண்டூழியர், நன்கொடையாளர் நிலையத் தின் தலைமை நிர்வாகி திருவாட்டி மெலிசா குயி நம்பிக்கை தெரி வித்தார்.

நன்கொடைகள் மூலம் திரட்டப் படும் தொகை சிறப்புத் தேவை யுடைய பிள்ளைகள், அபாயத்துக் குள்ளாகும் இளையர்கள், மனநலச் சுகாதாரப் பிரச்சினைகள் உடைய மக்கள், உடற்குறையுள்ள பெரிய வர்கள், அபாயத்துக்குள்ளாகும் முதியவர்கள், உதவி தேவைப்படும் குடும்பங்கள் போன்ற சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு உத வும்.

இந்த முயற்சியில், கிராப் சிங் கப்பூர், சிட்டி டெவலப்மண்ட்ஸ், சிறிய நடுத்தர நிறுவனங்களான சுமிஃப்ரு, ரெஹாவ் ஆகியவையும் சேர்ந்துகொண்டுள்ளன.

இம்முயற்சியின் மூலம் சேர்ந்தி ருக்கும் தொகை பற்றியும் இணைந் திருக்கும் நிறுவனங்களின் பட்டியல் பற்றிய விவரங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளி யிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!