மறுவிற்பனை வீட்டு விலைகள் நவம்பரில் 0.6% உயர்வு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறு விற்பனை வீட்டு விலைகள் கடந்த மாதத்தில் மாதத்துக்கு மாதம் என்ற அடிப்படையில் 0.6% உயர்வு கண்டது என்று எஸ்ஆர் எக்ஸ் சொத்து இணையத்தளம் நேற்று கூறியது.

2019ஆம் ஆண்டு முழுமைக்கும் -0.2%லிருந்து +0.2% வரை என்று இருந்த மறுவிற்பனை விலைகள் முதல் முறையாக கடந்த மாதத்தில் 0.6% உயர்ந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத் துடன் ஒப்புநோக்க மறுவிற்பனை விலைகள் 0.4% உயர்ந்தன. இருப்பினும் 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்த 13.8% உயர்வைக் காட்டி லும் அது சிறிய உயர்வுதான்.

முதிர்ச்சியடையாத பேட்டை களில் உள்ள வீட்டு விலைகள் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப் படையில் 2% உயர்ந்தது. முதிர்ச்சி அடைந்த பேட்டைகளின் வீட்டு விலைகள் 2% சரிந்தன.

அக்டோபர் மாதத்துடன் ஒப்பு நோக்க, மூவறை, நான்கறை, எக்சி கியூட்டிவ் வீடுகளின் விலைகள் முறையே 0.1%, 1.2%, 1.1% என்று இருந்தன. ஐந்தறை வீட்டு விலை கள் 0.1% சரிந்தன.

அதே மாதத்தில், முதிர்ச்சி யடையாத பேட்டைகளின் வீட்டு விலைகள் 1% அதிகரித்தது.

முதிர்ச்சி அடைந்த பேட்டை களின் வீட்டு விலைகளில் மாற்ற மில்லை.

மொத்தத்தில், கடந்த மாதத்தில் 1.915 வீடுகள் கைமாறின. அது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடு கையில் 13.5% சரிவு. அந்த மாதத் தில் 2,213 வீடுகள் கைமாறின.

இருப்பினும், ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பு நோக்க, மறுவிற்பனை வீட்டு விலைகள் 1.6% உயர்ந்தன.

கடந்த மாதம் விற்பனையான வீடுகளில் நான்கறை வீடு களின் விகிதம் 42.5%. ஐந்தறை வீடுகளின் விற்பனை 24.8% என்று இருந்தது.

மூவறை வீடு களின் விற்பனை விகிதம் 23.6%, எக்சிகியூட்டிவ் வீடுகளின் விற் பனை விகிதம் 6.8%. எஞ்சியுள்ள வீடுகள் அனைத்தும் பலதலை

முறை வீடுகள், ஈரறை வீடுகள் என்று அறிக்கையில் கூறப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களில் 4,432 வீடுகள் மறுவிற்பனைக்கு விடப்படும் என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்து இணையத்தளம் முன்னு ரைத்துள்ளது.

கடந்த மாதம் கைமாறிய ஆக விலை உயர்ந்த மறுவிற்பனை வீடு குவீன்ஸ்டவுன், காமன்வெல்த் டிரைவில் உள்ள உயர்மாடியில் உள்ள ஐந்தறை வீடு. அந்த வீடு $1.08 மில்லியனுக்கு விலை போனது.

முதிர்ச்சியடையாத பேட்டை யான சுவா சூ காங் ஸ்திரீட் 64ல் ஒரு பிரிமியம் மேசனட் வீடு $900,000க்கு விற்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!