'இந்த கௌரவம் எனக்கு மட்டுமல்ல, என் நாட்டுக்கும் உரித்தாகட்டும்'

'இந்த கௌரவம் எனக்கு மட்டுமல்ல, என் நாட்டுக்கும் உரித்தாகட்டும்'

1 mins read
c8ce4096-4722-422d-a5f6-7aae24209d7b
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இவ்வாண்டுக்கான தலைசிறந்த ஆசியர் என்ற விருது எனக்கு மட்டும் உரியதல்ல. மாறாக அது என் நாட்டுக்கும் உரியது என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார். படம்: புளூம்பர்க் -

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இவ்வாண்டுக்கான தலைசிறந்த ஆசியர் என்ற விருது எனக்கு மட்டும் உரியதல்ல. மாறாக அது என் நாட்டுக்கும் உரியது என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.

"விருதுக்கு நன்றி. இது எனக்கு மட்டும் உரிய கௌரவம் அல்ல. மாறாக இது எனது நாடான இந்தோனீசியாவுக்கும் உரிய கௌரவம்தான்," என்று அதிபர் விடோடோ தமது டுவிட்டர் தளத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

தமது ஆற்றலை உள்ளூரில் மட்டுமல்லாது உலக அளவி லும் வலுப்படுத்திக்கொண்டுள்ள அதிபர் விடோடோ, இவ் வாண்டு நடைபெற்ற இந்தோனீசிய அதிபர் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார். இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் ஆசியானின் தோற்றத்தை வலுப்படுத்தவும் 58 வயது அதிபர் விடோடோ அரும்பங்காற்றியுள்ளார் என்பதால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர்கள் ஒருமனதாக அவரை தலைசிறந்த ஆசியர் விருதுக்குத் தேர்ந்தெடுத்தனர்.