சுடச் சுடச் செய்திகள்

எஸ்ஐஏயின் டெல்லி சேவை 17 மணிநேரம் தாமதம்

சிங்கப்பூரிலிருந்து புதுடெல்லிக்கு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவை புறப்பட வேண்டிய நேரத்திலிருந்து 17 மணிநேரம் தாமதமாகப் புறப் பட்டதால் பயணிகள் பரிதவிக்க வேண்டியதாயிற்று.

கடந்த மாதம் 29ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப் பட வேண்டிய SQ406 சேவை அடுத்த நாள் காலை 9.23 மணிக்குப் புறப்பட்டது.

சேவை தாமதத்துக்கு இங்கு உள்ள வானிலை மோசமாக இருந்ததே காரணம் என்று முத லில் தெரிவித்த எஸ்ஐஏ, நிறுத்தப் பட்ட இடத்திலிருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்பட்ட சில நிமிடங் களில் விமானத்தின் ‘பிரேக்’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதுகாப்பு கருதி அது மீண்டும் நிறுத்தப்பட்ட இடத்துக்கே வந்தது.

“பொறியாளர்கள் விமானத்தில் உள்ள கோளாற்றைச் சரிசெய்த பின், பயணிகள் மீண்டும் விமா னத்தில் ஏற அழைக்கப்பட்டனர். ஆனால், இரவு 11.30 மணிக்கு விமானம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து கிளம்பியவுடன் கோளாறு மீண்டும் தலைகாட்டியதால் விமானம் திரும்பியது.

“பயணத்துக்கு இன்னொரு விமானத்தைப் பயன்படுத்தலாம் என்று பின்னிரவு 1.17 மணிக்கு முடிவு எடுக்கப்பட்டு, புறப்படும் நேரம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி காலை 7.30 மணி என்று அறிவிக்கப்பட்டது.

“காலை 7.30 மணிக்கு விமா னம் புறப்பட்டவுடன் சில பயணி கள் தங்களுக்கு உடல் நலமில்லை என்று கூறியதால், விமானம் மீண்டும் திரும்பி, உடல் நலம் குன்றியோர் விமானத்திலிருந்து இறங்கினர். 

“கடைசியாக காலை 9.23 மணிக்கு விமானம் புறப்பட்டு புதுடெல்லியை இந்திய நேரப்படி நண்பகலுக்குப் பிறகு சென்று சேர்ந்தது. தாமதத்துக்கு வருந்து கிறோம்,” என்று பயணிகளிடம் எஸ்ஐஏ கூறியது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon