காரை ஓட்டும்போது கண்ணயர்ந்த ஓட்டுநருக்கு $7,000 அபராதம்; வாகனம் ஓட்ட தடை

காரை ஓட்டும்போது கண்ணயர்ந்த ஓட்டுநருக்கு $7,000 அபராதம்; வாகனம் ஓட்ட தடை

1 mins read
e156b627-3c8b-4b3e-a8fc-c18363b62f7d
இந்த விபத்தில் காருக்குள் இருந்த 10 மாதக் குழந்தையின் மண்டையோட்டில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனது மனைவி, 10 மாதக் குழந்தை ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோதும் காரை ஓட்டிச் சென்ற ஆடவர் சற்று கண்ணயர்ந்ததால் அவரது கார் இடதுபக்கமாகச் சென்று அங்கிருந்த நடைபாதை மேல் சென்றது.

அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த திரு ஹசிதா பிரசாத் எனும் 37 வயது ஆடவர் மீது மோதிய கார் பின்னர் நின்றது. கார் நின்றதும் கண்விழித்தார் ஓட்டுநர்.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த 10 மாதக் குழந்தையின் மண்டையோட்டில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் உடல் நலம் தேறியது.

ஓட்டுநரின் மனைவிக்கு நெற்றியிலும் இடது கன்னத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது.

திரு ஹசிதா பிரசாத்துக்கு கைகால்களில் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மதம் ஏழாம் தேதி இரவு 11.45 மணியளவில் கம்போங் பாரு சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

காரை ஓட்டிச்சென்ற 27 வயது ஆடவருக்கு $7,000 அபராதமும் அனைத்து வாகன வகைகளை ஓட்ட ஈராண்டுத் தடையும் நேற்று விதிக்கப்பட்டன.

சம்பவம் நடந்த நாளன்று ஓட்டுநருக்கு உடல்நலம் சரியில்லை என்று அவரின் வழக்கறிஞர் கூறினார். வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டியதற்காக ஈராண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity