பொதுத் தாழ்வாரத்தில் மின்னேற்றப்பட்ட பிஎம்டி தீப்பற்றியது; மூவர் வெளியேற்றம்

பொதுத் தாழ்வாரத்தில் மின்னேற்றப்பட்ட பிஎம்டி தீப்பற்றியது; மூவர் வெளியேற்றம்

1 mins read
8864ac16-b9e8-457b-9684-497968f19f0a
தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றில் தீப்பற்றியதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த மூன்று குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். படம்: SCDF/Facebook -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்பின் பொதுத் தாழ்வாரத்தில் மின்னேற்றப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றில் தீப்பற்றியதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த மூன்று குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளெமென்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் உள்ள புளோக் 715ல் நேற்று (டிசம்பர் 5) பிற்பகல் 12.45 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் தொடர்பில் 49 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity