தூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை

தூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை

1 mins read
8f2498f4-42fd-4686-944d-04e32ab7ff9a
இஸ்மாயில் காதர். கோப்புப்படம்: எஸ்டி -

கொலை குற்றச்சாட்டுக்காக தூக்கிலிடப்படவிருந்த இஸ்மாயில் காதர், 51, பின்னர் குற்றமற்றதன் காரணத்தால் விடுதலை ஆகியும் மீண்டும் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டை நேற்று இஸ்மாயில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. போதைப்பொருளைக் கடத்துவதற்காக அஸ்மான் அவாப் என்ற நண்பனுடன் சேர்ந்து இஸ்மாயில் போதைப்பொருளை வாங்கியதாகவும் அந்த நேரத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு பிடிபட்டனர் என்றும் கூறப்பட்டது.

2005ஆம் ஆண்டில் நடந்த கொலைக்காக பின்னர் 2011ல் விடுதலை ஆன இஸ்மாயிலுக்கு, மறு ஆண்டே போதைப்பொருள் உட்கொண்டதற்காக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றம் புரிந்துள்ள இஸ்மாயிலுக்கு மறுபடியும் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.