இருநூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் தமிழர் களுக்கும் தென்கிழக்காசிய சமூகங்களுக்கும் இடையில் இருந்த தொடர்புகளை ஆராய்கிறது ‘குறுந்தங்கலர்கள் முதல் குடியேறிகள் வரை - தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்கள் அனைத்துலக மாநாடு’.
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு ஆண்டில் நடத்தப் படும் இம்மாநாட்டில், பண்டைக்காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலிருந்த தொடர்புகளைப் பற்றிய கருத்துகளை பேச்சாளர்கள் பகிர்ந்து கொள்வர்.
இந்த இரு நாள் மாநாட்டின் ஓர் அங்கமாக ‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா இடம்பெறும். தென்கிழக்காசியாவில் கால்பதித்த தமிழர்களின் நெடிய வரலாற்றை இப்புத்தகம் விவரிக்கும். இதில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். இன்று ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் ‘ரிவர்’ அறையில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இம்மாநாட்டிற்கு பதிவுச் செய்ய விரும்புவோர் indianheritagecentre.peatix.com எனும் இணையத்தளத்திற்குச் செல்லலாம்.