‘முன்னைய தலைவர்களின் சாதனைகளை மையமாக வைத்து முன்னேற்றம்’

நாட்டின் முன்னைய தலைவர் களின் சாதனைகளை மையமாக வைத்து, அவற்றை நவீனமயப் படுத்தி, உருமாற்றி செயல்படுத்தி வந்ததால்தான் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றி அடைந்து வந்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு தலைமுறை சிங்கப்பூரர்களும் அவர்களின் முன்னைய தலைவர்களின் சாத னைகளிலிருந்து பெருந்தன்மை யான, சிறப்பான செயல்களை மையமாக வைத்து அவற்றில் இருந்து மேலும் பலவற்றை சாதித்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கு அர்ப்பணித்து வந்திருக்கிறார்கள்.

“அவை அடுத்த தலைமுறையி னரும் சிங்கப்பூரும் மேலும் பல வெற்றிகளைப் பெற காரணங்க ளாக இருந்துள்ளன,” என்று சிங்கப்பூர் கிரிக்கெட் மன்றத்தின் வருகையாளர் இரவு விருந்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு திரு லீ உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.

அந்த விருந்தில் திரு லீக்கு சிங்கப்பூர் கிரிக்கெட் மன்றத் தின் மதிப்புமிக்க வருகையாளர் என்ற விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன் இந்த விருது சிங்கப்பூரின் இரு முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்பட்டது.

1970ஆம் ஆண்டில் சிங்கப்பூ ரின் முதலாம் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவுக்கும் 2007ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது பிரதமர் திரு கோ சோக் டோங் குக்கும் விருது வழங்கப்பட்டு உள்ளது.

“கடந்த 167 ஆண்டுகளாக, சிங்கப்பூர் கிரிக்கெட் மன்றம் பாடாங் திடலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னமாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் நவீன சிங் கப்பூரின் வளர்ச்சியையும் உரு மாற்றத்தையும் இந்த மன்றம் கண்கூடாகப் பார்த்துள்ளது,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பல ஏற்ற இறக்கங் களைக் கண்டு சாதித்துள்ளது என்று குறிப்பிட்ட திரு லீ, “பாடாங் பகுதியும் சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கி வந்துள்ளது.

“1966ல் சுதந்திர சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு, சிங்கப்பூரின் 50ஆம் ஆண்டு நிறைவு தேசிய தின அணிவகுப்பு, இருநூற்றாண்டு நிறைவு தேசிய தின அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகளைப் பாடாங் பார்த்துள்ளது,” என்றார்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக சிங்கப்பூர் கிரிக்கெட் மன்றத் தின் தலைவர் ஷெர் பல்ஜிட் சிங், ‘ஸ்போட்கேர்ஸ்’ அமைப்புக்கான $300,000 நன்கொடைக்கான காசோலையை, பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் டெக் இன்னிடம் வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!