பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

பயன்படுத்தப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள், கழிவு விலையில் பள்ளிப்படிப்புக்குத் தேவையான உபகரணங்கள், பற்றுச்சீட்டுகள், மளிகைப் பொருட்கள் என பல வழி களில் வசதி குறைந்த குடும்பங்கள் நேற்று தெம்பனிஸ் ஹப் மையத்தில் உதவிகள் பெற்றன.

நேற்று நடந்த வருடாந்திர ஃபேர்பிரைஸ் பாடப் புத்தகப் பகிர் வுத் திட்டத்தில் பங்கேற்க 25,000 வசதி குறைந்த மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டார்கள்.

இவ்வாண்டு திட்டத்துக்கு சுமார் 550,000 புத்தகங்கள் நன் கொடையாகக் கிடைக்கப்பெற்றன. இத்திட்டத்தின் 37 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஆண்டில்தான் ஆக அதிகமான புத்தகங்கள் நன் கொடையாகக் கிடைத்தன.

இலவச பாடப் புத்தகங்கள் தவிர்த்து, பெரும்பாலும் என்டியுசி உறுப்பினர்களைக் கொண்ட என்டி யுசி-யு-கேர் நிதியின் 30,000 பயனா ளர்கள் என்டியுசி பள்ளிக்குத் திரும்புதல் திட்டத்தின் கீழ் கழிவு விலைகளில் பள்ளிப்படிப்புக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம்.

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவு களில் பள்ளிப்பைகளையும் கால

ணிகளையும் வாங்கிக்கொள்ள லாம். இத்திட்டம் இன்றும் இடம்பெறு கிறது.

“சமூகத்திடமிருந்து கிடைத்து வரும் தொடர் ஆதரவால் நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம். அந்த ஆதரவின் மூலம் இந்த ஆண்டு 550,000 பாடப்புத்தகங்கள் கிடைத் துள்ளன.

“சமூகத்தின் தாராள குணமும் இத்திட்டத்துக்கு அரும்பாடுபட்ட தொண்டூழியர்களும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. என்டியுசியின் யு-கேர் பள்ளிக்குத் திரும்புதல் திட்டத்துடன் சேர்ந்து நமது சமூகத்தின் வசதி குறைந்த வர்களைத் திரட்டி, அவர்கள் பிள் ளைகளின் பள்ளிச் செலவுகளைக் குறைக்க உதவ முடிந்துள்ளது,” என்றார் ஃபேர்பிரைஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி திரு சியா கியான் பெங் தெரிவித்தார்.

தெம்பனிஸ் ஹப் மையத்தின் மற்றொரு பகுதியில், வசதி குறைந்த 300 குடும்பங்கள் $240 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை யும் உணவுப் பற்றுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டன.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், நியூ கிரியேஷன் தேவால யம் ஆகியவை இணைந்து இந்த உதவியை அளிக்கின்றன.

சமூகப் பங்காளிகளும் இந்த ஒத்துழைப்புக்கு தங்கள் ஆதர வைத் தெரிவித்துள்ளனர்.

என்யுடிசிஃ பேர்பிரைஸ் அற நிறுவனம் $30 மதிப்பிலான விழாக் காலப் பையில் ‘காயா’, ‘ஓட்மீல்’ போன்ற உணவுப் பொருட்களைக் கொடுத்தது.

“இந்த விழாக்காலத்தில், தங் கள் தோள்களில் உள்ள சுமை சற்று குறைக்கப்படுவதை சில குடும்பங்கள் நன்றியுடன் வரவேற் கும்.

“புதிய பள்ளி ஆண்டில் தங்கள் பிள்ளைகளுக்கு போதிய பாட உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்வதில் பெற்றோர்கள் மூழ்கி இருப்பார்கள். நமது பங்காளிகள் அளித்த தாராள உதவிகளுக்கு நன்றி.

“ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தின் தொடர்பில் இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் நமது சமூகத்துக்கு உதவ முன் வர வேண்டும் என்று ஊக்குவிக்கி றோம்,” என்றார் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் திரு டெஸ்மண்ட் சூ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!