காருக்குள் பெரும் அளவிலான கள்ள சிகரெட்டுகள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வருகைப் பகுதியில் ஒரு கார் பழுதாகி நின்றபோது, அதனை குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் சோதனை இட்டனர்.

அப்போது அந்தக் காருக்குள் 183 பெட்டிகள், 973 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சம்பவம் கடந்த செவ் வாய்க்கிழமை நடந்தது. பழுதாகி நின்ற காரைப் பார்த்த அதிகாரிகள் அதை பாதுகாப் பான இடத்துக்கு அப்புறப்படுத்தி அதைச் சோதனையிட்டனர். அப் போது காரின் பல பகுதிகளில் கள்ள சிகரெட்டுகள் இருப்பதைக் கண்டனர்,” என்று ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது.

இதன் தொடர்பில் 37 வயது சிங்கப்பூரர் கூடுதல் விசார ணைக்காக சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.