குவாமில் சிங்கப்பூர் போர்விமானப் பயிற்சித் தளம்

குவாமில் சிங்கப்பூர் போர்விமானப் பயிற்சித் தளம்

2 mins read
33ad40d8-7ea8-489e-9ebf-d80dd87318f1
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கையெழுத்துச் சடங்கில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் பங்கேற்று உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். படம்: தற்காப்பு அமைச்சு -
Google News Preferred Icon

அமெரிக்காவின் குவாம் பிரதேசத்தில் தனது போர்விமானங்களின் பயிற்சிக்காக சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படைக்கு தளம் ஒதுக்கும் உடன்பாட்டில் அமெரிக்காவில் நேற்று முன்தினம் சிங்கப்பூரும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான தற்காப்பு உறவுகளுக்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டு என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது.

குவாமில் உள்ள ஆண்டர்சன் ஆகாயப்படைத் தளம் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் போர் விமானப் பயிற்சிக்கான நிரந்தரத் தளமாக விளங்கும்.

இது வெளிநாட்டில் இயங்கும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை யின் ஆறாவது நிரந்தரத் தளமாக அமையும்.

மேலும் இது சிங்கப்பூருக்கு புவியியல் ரீதியில் ஆக அருகில் இருக்கும்.

இதைத் தவிர அமெரிக்கா வில் சிங்கப்பூர் குடியரசு ஆகா யப்படையின் இதர மூன்று தளங் களில் இரண்டு அரிசோனா விலும் ஒன்று இடாஹோவிலும் உள்ளன.

அமெரிக்காவைத் தவிர, ஆஸ் திரேலியாவின் குவீன்ஸ்லாந்து, பிரான்சின் போடோ ஆகிய இடங் களிலும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் தளங்கள் இருக்கின்றன.

"சிங்கப்பூரின் மிகக் குறுகிய ஆகாயவெளி போர்விமானப் பயிற்சிக்கு போதியதாக இல்லை. மாறாக, குவாமில் உள்ள பெரிய அளவிலான ஆகாயவெளி, போர் விமானப் பயிற்சிக்குப் பெரிதும் உதவும்.

"இதன் மூலம் சிங்கப்பூர் குடி யரசு ஆகாயப்படை தத்ரூபமான சூழ்நிலையில் பயிற்சிகளை மேற் கொள்ள வாய்ப்பிருப்பதால், விமா னிகள் தங்கள் ஆற்றல்களையும் தயார்நிலையும் பன்மடங்கு மேம் படுத்திக்கொள்ள முடியும்," என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

கலிஃபோர்னியாவில் இடம் பெற்ற கையெழுத்துச் சடங்கில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்ப ரும் பங்கேற்று உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

ரீகன் தேசிய தற்காப்புக் கருத் தரங்கில் கலந்துகொள்ள அமெ ரிக்கா வந்துள்ள டாக்டர் இங், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை யின் பயிற்சிக்கு உதவும் வகை யில் குவாம் தளத்தை அளித்த அமெரிக்காவுக்கு நன்றி தெரி வித்துக்கொண்டார்.

"குவாம் உடன்பாடு, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் செயல்பாட்டு தயார்நிலையைப் பலப்படுத்தும்," என்றும் அமைச்சர் இங் விவரித்தார்.