சுடச் சுடச் செய்திகள்

இனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் பிரியமுள்ள பனிக்கரடியாக வலம் வந்து பார்ப்போர்  அனைவரையும் மகிழ்வித்து கடந்த ஆண்டு மாண்ட இனுக்காவைப் பற்றிய புத்தகம் இவ்வாண்டின் குழந்தைகளுக்கான ஆகப் பிரபலமான ஆங்கிலப் புத்தகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்துருவம், வடதுருவம் ஆகிய குளிர் பிரதேசங்களில் இல்லாது, இனுக்கா வெப்பமண்டலத்தில் பிறந்த முதல் பனிக்கரடியாகும். 

“அதைப் பற்றிய பசுமையான நினைவுகளை ‘தி ஒன் அண்ட் ஓன்லி இனுக்கா’ புத்தகம் கொண்டிருக்கிறது,” என்று வருடாந்திர பாப்பியுலர் வாசகர்களின் தேர்வு விருதுகளின் முடிவுகளை நேற்று முன்தினம் அறிவித்த பாப்பியூலர் புத்தகக்கடை கூறியது.

அந்தப் புத்தகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆலன் ஜான் புனைந்துள்ளார். நூலை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் அச்சடித்தது.

நூல் வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நடைபெற்றது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon