ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு எம்ஆர்டி நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026ல் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூரோங் வெஸ்ட், பஹார் ஜங்ஷன் ஆகியன அவ்விரு நிலையங்கள் என நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.
ஏறத்தாழ $210 மில்லியன் மதிப்பிலான இதற்கான ஒப்பந்தம், ‘சைனா ரயில்வே 11 புயூரோ’ குழுமத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் ஏழாவது ரயில் பாதையான ஜூரோங் வட்டார பாதை, 2026ஆம் ஆண்டிலிருந்து மூன்று கட்டங்களாக திறக்கப்படும். கடந்த ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில் பாதையில் 24 நிலையங்கள் உள்ளன. சிங்கப்பூரின் இரண்டாவது மத்திய வர்த்தகப் பகுதியாக உருவெடுக்கவுள்ள ஜூரோங்கில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக இந்த ரயில் பாதை அமையும்.
அந்த சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், மேற்கூறப்பட்ட இரு ரயில் நிலையங்களுக்கான வடிவமைப்பும் கட்டுமானப் பணிகளும் 1.15 கிலோ மீட்டர் நீளமுடைய ரயில் மேம்பாலத் தடமும் உள்ளடங்கும்.
ஜூரோங் வெஸ்ட் ரயில் நிலையம், ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2ல் அமையவிருக்கிறது. இந்த நிலையத்தில் ஒரு ரயில் மேடை மட்டுமே அமையும். அதில் வரும் ரயில்கள், சுவா சூ காங் மற்றும் ஜூரோங் பியர் நிலையத்தை நோக்கிச் செல்லும்.
பஹார் ஜங்ஷன் நிலையம், ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4ல் அமையவுள்ளது. அந்த நிலையத்தில் இரு ரயில் மேடைகள் அமையும். அவற்றை இணைக்க 100 மீட்டர் நீளமுடைய கூரையுடன் கூடிய பாலம் அமைக்கப்படும். அங்கு அமையவுள்ள ரயில் மேடைகளில் ஒன்றில், சுவா சூ காங் மற்றும் ஜூரோங் பியர் நிலையத்தை நோக்கி ரயில்கள் செல்லும். மற்றொரு ரயில் மேடையில், பெங் காங் ஹில் நிலையத்தை நோக்கி ரயில்கள் செல்லும்.
உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ‘சைனா ரயில்வே 11 புயூரோ’ குழுமம் பெயர் பெற்றுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. உதாரணத்திற்கு, மூன்று எம்ஆர்டி நிலையங்கள் மற்றும் அவற்றுக்கான ரயில் மேம்பாலத் தட கட்டுமானப் பணிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டது. கிழக்கு மேற்கு ரயில் பாதை, துவாஸ் வெஸ்ட் பகுதிக்கு நீட்டிக்கப்படும் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த ரயில் பணிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டது.
ஜூரோங் வட்டார ரயில் பாதையில் முதல் ஐந்து நிலையங்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இவ்வாண்டு செப்டம்பரில் வழங்கியிருந்தது. சுவா சூ காங், சுவா சூ காங் வெஸ்ட், தெங்கா, ஹொங் கா, கார்ப்பரேஷன் ஆகியன அந்த நிலையங்கள்.
ஜூரோங் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நீண்டகால திட்டங்கள் நிறைவேறியவுடன், நாள் ஒன்றுக்கு ஜூரோங் வட்டார ரயில் பாதையை 500,000க்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!