விபத்து; $872,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

விபத்து; $872,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
fe8ee482-3003-4ce7-a409-89afe46f9945
-

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்று விபத்தில் சிக்கிய 28 நபர் மூளையில் ஏற்பட்ட காயத்துக்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நண்பர் மீது வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் டேனியல் சியாஃபிக் மஹ்பாப்புக்கு 872,000 வெள்ளி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஆனால் தன்னைப் பராமரிப்பதற்காக பணிப்பெண்ணுக்குச் செலவிட்ட 420,000 வெள்ளியையும் தர வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

2013 ஏப்ரல் 17ஆம் தேதி நண்பர் அமின் ஜுமான் அப்துல் ஜப்பார் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் பின்னால் டேனியல் சியாஃபிக் சென்றபோது டாக்சியுடன் மோதியதில் விபத்து நேர்ந்தது.

குறிப்புச் சொற்கள்