ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சண்டை; கைகலப்பில் ஈடுபட்ட இருவர் கைது

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சண்டை; கைகலப்பில் ஈடுபட்ட இருவர் கைது

1 mins read
0de54af6-d3ee-4370-8efb-382ab1610b64
சுமார் பத்து பேர் சண்டையிடுவதை சமூக ஊடகங்களில் வெளியான 15 வினாடி காணொளி காட்டியது. படம்: டுவிட்டர் -

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சுமார் பத்து பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணியளவில் சண்டை மூண்டது. சண்டைக்கான காரணம் தெரிய வில்லை. ஆனால் அவர்கள் காலால் எட்டி உைதத்தும் கையால் குத்தியும் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார் கைகலப்பில் ஈடுபட்ட தற்காக இருவரைக் கைது செய்த னர். ஒருவருக்கு வயது 43, மற் றொருவருக்கு வயது 55 என்றும் இருவருக்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப் செயலியில் பரவிய 15 வினாடி காணொளியில் அமெரிக்க விரைவு உணவகமான 'ஏ அண்ட் டபிள்யு' முன்பு சிலர் கை கலப்பில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.

அவர்களில் சிலர் தரையில் விழுந்து கிடந்த ஒரு நபரை காலால் எட்டி உதைத்தனர். சிலர் அவரை கையால் குத்த முயற்சி செய்தனர்.

கைகலப்பு சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity