கழிவை குறைப்பது அனைவரின் பொறுப்பு

சிங்கப்பூரில் கழிவின் அளவு கடந்த 40 ஆண்டுகளில் ஏழு மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரின் நிலப் பற்றாக்குறையினால், 1999ஆம் ஆண்டில் செமாக்காவ் தீவு குப்பை நிரப்புமிடமாக திறக்கப்பட்டது.

ஏறத்தாழ 350 ஹெக்டர் பரப்பளவிலான செமாக்காவ் தீவு ழுழுவதும் கடற்பரப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் குப்பை நிரப்புமிடமாகும்.

குப்பை நிரப்புமிடம் என்றாலும் இது பல்லுயிரினங்களுக்கு ஏதுவான சூழலைக் கொண்ட தீவாகவும் விளங்குகிறது.

செமாக்காவ் தீவைச் சிறந்த வகையில் மேம்படுத்தியதற்காக அனைத்துலக உன்னத பொறியியல் கட்டமைப்பு விருது ஒன்றை சுற்றுப்புற, நீர்வள அமைச்சு கடந்த மாதம் பெற்றது.

சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பு மிடமாக செமாக்காவ் தீவு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும், சுமார் 200,000 டன் எடை கொண்ட கழிவும் எரியூட்டப்பட்ட சாம்பலும் செமாக்காவ் தீவிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த இடம் 2045ஆம் ஆண்டு வரை செயல்படும் என முன்னதாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கு கொட்டப்படும் கழிவின் அளவு அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், 2035ஆம் ஆண்டிற்குள் அங்கு இடப்பற்றாக்குறை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்தைச் சுற்றுப்புற, நீர்வள அமைச்சு வரைந்துள்ளது.

சிங்கப்பூரில் சேரும் கழிவின் அளவைக் கணிசமாக குறைக்கும் நோக்கத்தை இத்திட்டம் கொண்டுள்ளது.

செமாக்காவ் தீவிற்கு அனுப்பப்படும் கழிவின் அளவை 2030ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடு வரை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதைச் செய்தால்தான், 2035ஆம் ஆண்டையும் தாண்டி குப்பை நிரப்பு மிடமாக செமாக்காவ் தீவு இயங்க முடியும்.

எரியூட்டு ஆலைக்கு கழிவை அனுப்பி அதைச் சாம்பலாக்கி, கழிவின் அளவை குறைப்பது, மறுபயனீடு மற்றும் மறுபயன்பாடு போன்ற உத்திகளைக் கையாண்டு பொருட்கள் செயல்படக்கூடிய காலத்தை நீட்டிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளடங்கு கின்றன.

இது சாத்தியமாக, நிறுவனங்களும் சமுதாயமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 கிராம் எடை கொண்ட கழிவை தனிநபர் ஒருவர் வீசுகிறார். இந்தப் பெருந்திட்டத்தின் கீழ், 30 விழுக்காடு வரையிலான கழிவின் அளவு குறைய சாத்தியமாவதற்கு, நாள் ஒன்றுக்கு 640 கிராம் எடையுள்ள கழிவை அல்லது அதற்கும் குறைவான கழிவை ஒருவர் வீச வேண்டும்.

மாதம் ஒன்றுக்கு இந்த வித்தியாசத்தை கூட்டிப் பார்த்தால், அது 30 வாழைப்பழங்கள் அல்லது 15 கண்ணாடி போத்தல்களின் எடைக்கு ஈடாகும்.

இவ்வாறு அனைவரும் தங்களது பங்கை ஆற்றினால் வருங்கால தலைமுறையினருக்கு போதுமான வளங்கள் இருப்பதை நாம் உறுதி செய்ய முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!