சட்டவிரோத சூதாட்டம்; 24 பேர் கைது

சட்டவிரோத சூதாட்டம்; 24 பேர் கைது

1 mins read
350417cb-4313-4666-9444-f5883e4f732d
இந்த நடவடிக்கையில் கைதானோரின் வயது 22 முதல் 63 வரை. படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை -
multi-img1 of 2

கேலாங் ரோட்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 ஆடவர் கைது செய்யப்பட்டனர்.

பிடோக் போலிஸ் பிரிவு, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் கைதானோரின் வயது 22 முதல் 63 வரை.

சிக்கியவர்களில் 26 வயதான ஆடவர் ஒருவர் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைதானார். மற்ற 23 பேரும் பொது விளையாட்டு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சுமார் $3,100 ரொக்கமும் சூதாட்டம் தொடர்பான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று போலிசார் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கைதானவர்களில் நால்வர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்