வேறொருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி $5,700 மதிக்கத்தக்க பொருட்களை வாங்கிய 32 வயதான பெண் நேற்று கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். கடன் அட்டையைக் கொண்டு துணிமணிகள், கைப்பைகள், காலணிகள் போன்ற பொருட்களை அப்பெண் வாங்கியதாகக் கூறப்பட்டது. தொலைந்துபோன தமது கடன் அட்டையில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு உள்ளதைப் பற்றி அதன் உரிமையாளர் புகார் அளித்ததை அடுத்து பெண் கைதானார்.
வேறொருவரின் கடன் அட்டையில் $5,700 செலவு செய்த பெண் கைது
1 mins read
-
குறிப்புச் சொற்கள்
மோசடிகைது

