பிடோக் தரைவீட்டில் தீ; மருத்துவமனையில் மூவர்

பிடோக் தரைவீட்டில் தீ; மருத்துவமனையில் மூவர்

1 mins read
89807e64-a024-4651-ad4b-aa4bf99a3333
படம்: வான் பாவ், சாவ் பாவ் -

பிடோக் வட்டாரத்தில் உள்ள தரைவீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 7, பீக்வில் டெர்ரசில் தீச்சம்பவம் நடந்தது

குறித்து அன்று பிற்பகல் 3.05 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. மூன்று மாடி வீட்டின் மூன்றாவது தளத்தில் மூண்டிருந்த தீயை, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாய் மூலம் அதிகாரிகள் அணைத்தனர். வீட்டில் இருந்த ஓர் ஆடவரும் இரண்டு பெண்களும் புகையைச் சுவாசித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.