லிட்டில் இந்தியாவில் நள்ளிரவில் தள்ளாட்டம்; போக்குவரத்துக்கு இடையூறு

லிட்டில் இந்தியாவில் நள்ளிரவில் தள்ளாட்டம்; போக்குவரத்துக்கு இடையூறு

1 mins read
3ba8888a-bcf6-400e-a649-0429e28e55ed
நள்ளிரவு வேளையில் லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலையில் ஆடவர் இருவர் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்த காணொளி வெளியாகியுள்ளது. படம்: காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது. -

நள்ளிரவு வேளையில் லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலையில் ஆடவர் இருவர் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்த காணொளி வெளியாகியுள்ளது.

சிராங்கூன் ரோட்டில் கோமள விலாஸ் உணவகத்துக்கு எதிரில் உள்ள சத்யா ஜுவல்லர்ஸ் நகைக் கடை முன்பாக ஒருவர் சாலையில் தள்ளாடுவதுடன் வாகனங்களை மறைப்பது, வாகனங்களைப் பார்த்து கத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் மற்றவர் அவரை சாலையின் ஓரத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்வதும் தெரிகிறது.

(காணொளியை முழுமையாகக் காண 'full screen mode'க்கு செல்லவும்)

ஒருவழிப் பாதையான அதில், சில வாகனங்கள் செல்வதற்கு அவர்கள் இடையூறாக இருப்பதும் எரிச்சலடைந்த வாகனமோட்டிகள் ஹார்ன் ஒலி எழுப்புவதும் தெரிகிறது.

'ஆல் சிங்கப்பூர் ஸ்டஃப்' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி பலராலும் பகிரப்படுவதுடன் மாறுபட்ட கருத்துகளை இணையவாசிகளிடமிருந்து பெறுவது குறிப்பிடத்தக்கது.

மதுவருந்திவிட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக காணொளியைப் பதிவு செய்த நபர் குறிப்பிடுவதைக் காணொளியின் முடிவில் கேட்க முடிகிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்