சுடச் சுடச் செய்திகள்

வேலைப்பயிற்சித் திட்டங்களுக்காக $72,000 ஏமாற்றிய ஐவர் மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஊழியரணி மேம்பாட்டு அமைப்பிடமிருந்து கிட்டத்தட்ட $72,000க்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றியதன் தொடர்பில் மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த ஐவர் மீது நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த ஐவரும் ஈராண்டு காலத்தில் நடந்த பயிற்சித் திட்டங்கள் தொடர்பில் போலி பத்திரங்களைச் சமர்ப்பித்துக் கோரிக்கைத் தொகைகளைப் பெற்று வந்ததாகக் கூறப்பட்டது. ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கும் மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு அமைப்பை ஏமாற்றியதாக அறியப்படுகிறது. மோசடி, போலி பத்திரங்களைத் தயாரித்தல் தொடர்பில் ஐவருக்கும் தண்டனை விதிக்கப்படும்.