கழிவறைக்குள் அத்துமீறிச் சென்று பெண்களைப் படம் பிடித்ததன் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் ராயன் யூ ஜுன் சாவ், 25, குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள உள்ளதாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இவ்வாண்டு பிப்ரவரி 14 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரு வேறு சம்பவங்களின்போது பெண்களைக் கழிவறைக்குள் பின்தொடர்ந்து சென்று, யூ படம் பிடித்ததாக அறியப்படுகிறது. இதற்கிடையே யூவை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் யூவின் பட்டமளிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் என்யுஎஸ் பேச்சாளர் ஒருவர் ‘சிஎன்ஏ’ நிறுவனத்திடம் கூறினார். அத்துடன் கட்டாய ஆலோசனை, மறுவாழ்வு திட்டக் கூட்டங்களுக்கு யூ செல்லவேண்டும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்தது. அடுத்த மாதம் 20ஆம் தேதியன்று தன் மீதான குற்றச்சாட்டுகளை யூ ஒப்புக்கொள்ளவிருப்பதாக நேற்று கூறப்பட்டது.