கவனக்குறைவாக வாகனமோட்டி விபத்துகளுக்கு காரணமான இரு டாக்சி ஓட்டுநர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

கவனக்குறைவாக வாகனமோட்டி விபத்துகளுக்கு காரணமான இரு டாக்சி ஓட்டுநர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

3 mins read

டாக்சி ஓட்டுநர் ஒருவர் கடந்த ஜூலை மாதத்தில் கவனக்குறை வாக வாகனமோட்டி பாதசாரி ஒரு வர் மீது மோதி அவரை கோமா நிலைக்கு ஆளாக்கிய 56 வயது திரு கான் சீ சியூ நேற்று நீதி மன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு இரண்டு வாரச் சிறையும் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களை ஓட்ட தடையும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றிய திரு கான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஜாலான் புசாரை நோக் கிச் செல்லும் சையது ஆல்வி ரோட் டில் சாலைச் சந்திப்பை நெருங்குகை யில் டாக்சியை நிறுத்தாமல் வலது பக்கம் திரும்பியபோது, அச்சமயம் சாலையைத் தாண்டிக் கொண்டி ருந்த 61 வயது திருவாட்டி பக் கிரிசாமி கமலாவை மோதினார்.

அந்த மோதலின் விளைவாக திருவாட்டி கமலா இரண்டு மீட்ட ருக்கு அப்பால் தூக்கி வீசப் பட்டார்.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்ட அவருக்கு மூளையில் காயமும் கபால எலும்பு முறிவும் ஏற்பட்டன. 12 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த கமலா, கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தாதிமை இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.

"விபத்து நடந்த தேதியிலிருந்து இன்று வரை திருவாட்டி கமலா கோமா நிலையில் உள்ளார்," என்று மாவட்ட நீதிபதி பிரெண்டா டான் கூறினார்.

சுங்கை காடுட் சம்பவம்

டாக்சி ஓட்டுநர் சம்பந்தப்பட்ட மற்றொரு விபத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு நிகழ்ந்தது.

பக்கவிளைவாக அயர்வு நிலையை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டிருந்த டெஸ்மண்ட் டான் டாட் சியோங் எனும் டாக்சி ஓட்டுநர் சுங்கை காடுட் அவென்யூ வை நோக்கிச் சென்றுக்கொண்டி ருந்தபோது, இடப்பக்கமாகத் திரும் பும்போது, வாகனத்தை மெதுவாக செலுத்தவில்லை.

அதன் காரணமாக டாக்சி, சாலையின் மத்திய மேடையின் மீது ஏறிய பின், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் லாரி ஒன்றையும் மோதி யது.

அதன் விளைவாக, மலேசிய மோட்டார் சைக்கிளோட்டியான 57 வயது சோங் ஆ ஹீ, சாலையில் தூக்கி எறியப்பட்டார். அவர் மீது லாரி ஏறியது. சோங் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

கண்மூடித்தனமாக வாகன மோட்டிய குற்றத்தை நேற்று நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டார் 34 வயது திரு டான்.

விபத்து நடப்பதற்கு முன் தனக்குக் கடும் தலைவலி ஏற்பட் டது என்றும் தனது காதலியின் வீட்டுக்குச் சென்று அவர் கொடுத்த இரண்டு அயர்வு பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடிய 'அனாரெக்ஸ்' மாத்திரைகளையும் தன்னிடம் இருந்த இருமல் மருந்தையும் உட் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

"நீங்கள் உட்கொண்ட மருந்து கள் அயர்வுநிலை, குழப்பநிலை, இரட்டைப் பார்வை, தூக்கநிலை போன்ற வாகனமோட்டுவதற்கு ஆபத்தான விளைவுகளை ஏற் படுத்தக்கூடியவை," என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டான் யென் சியாவ் கூறினார்.

விபத்து நடந்த போது டாக்சியில் பயணிகள் இல்லை. டானுக்கு $15,000 பிணை வழங் கப்பட்டது. தண்டனை விதிப்பு இம்மாதம் 27ஆம் தேதி இடம்பெறும்.