2030க்குள் மாணவர்களுக்கு வேலை-கல்விப் பாதை

ஒவ்வோர் ஆண்டு பிரிவின் மாணவர்களில் 12 விழுக்காட்டினர் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் வேலை-கல்விப் பாதையில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

ஊழியரணி பற்றிய அறிவை மாணவர்கள் பெறுவது இதன் நோக்கமாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் ஜெர்மனியின் ஹைடல்பர்க் நகரில் தெரிவித்தார்.

ஜெர்மனிக்கு அரசுபூர்வ வரு கையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பேராளர் குழுவில் திரு ஓங் இடம்பெற்றிருந்தார்.

“தொழில்நுட்ப இடையூறுகள் அதிகமாக இடம்பெற்று வருவ தால், அடிப்படை பற்றி தெரிந்து கொள்ளும் போக்கு தொழில் துறையில் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

“கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், தொழில்பயிற்சி மாதிரியில், ஆற்றல்கள், ஞானம், ஆசிரியரிலிருந்து மாணவர் வரை யிலான திறன்கள் மாற்றப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் இயந்திர மனிதனின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டு வருவதால், ஊழியர்களுக்கு அடிப் படையில் ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.

“தொழில்துறைப் பயிற்சி கடினமானது என்றும் வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையற்றது என்றும் பலர் தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு மாறாக, ஆற்றல்களை கைவசப்படுத்தும் போக்கால், குறிப்பாக அடிப்படை மூலத் திறமை

களால்தான் மாற்றங்க ளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.

“இதுதான் இரட்டைக் கல்வி முறையின் சிங்கப்பூர் பாணி. இந்த பிரதான வாழ்க்கைப் பாதையை நாம் ஜெர்மனியிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்,” என்றார் அமைச்சர் ஓங்.

ஜெர்மனியின் பெடன்-வர்ட்டன் பர்க் மாநிலத்தில் உள்ள ஹைடல் பர்க் நகர் இரட்டைக் கல்வி முறைக்குப் பெயர் பெற்றது.

அங்கு நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து மூன்று ஆண்டுகளில் பல்வேறு தொழில்துறைகள் பற்றி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக் கும்.

மாணவர்கள் பெரும்பாலும் தாங் கள் பயிற்சி எடுக்கும் நிறுவனங் களிலேயே முழு நேரமாக வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள்.

ஹைடல்பர்க் நகரில் உள்ள மின் சாரச் சாதனங்கள் நிறுவன வளா கத்தில் திரு ஓங் பேசினார்.

அதன் பிறகு சிங்கப்பூர் கல்வி அமைச்சும் பெடன்-வர்ட்டன் கல்வி, இளையர், விளையாட்டுத்துறை அமைச்சும் வாழ்க்கைத்தொழில் மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு குறித்து கூட்டுப் பிரகடனத்தில் கையெ ழுத்திட்டன.

இதன் முன்னைய பிரகடனம் 1991ஆம் ஆண்டில் செய்துகொள் ளப்பட்டது.

“புதிய எதிர்காலத்துக்குத் தேவைப்படும் நமது கல்வி முறை யில் மாற்றங்கள் கொண்டு வருவ தற்கு இதுபோன்ற பங்காளித்துவம் விலைமதிப்பற்றது,” என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில் செய்து கொள்ளப்பட்ட 14 புரிந்துணர்வுக் குறிப்புகள், உடன்பாடுகளில் பாதிக் கும் மேற்பட்டவை கல்வி தொடர் பானவை என்றும் தெரிவிக்கப் பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!